Thursday, December 18, 2008

அவள்...!!!

அவள்...!!!
பிறக்கும் போதுபுரியாத பல முகங்கள்அழுதுகொள்வேன்அணைத்துக் கொள்வாள்.....அவள்...!தட்டித் தடவிதவளும் போதும்எட்டிப் பாதங்கள் பதிக்கும் போதும்தடக்கி வீழ்வேன்தாங்கிக் கொள்வாள்......அவள்...!கண்கள் விழிக்க வைத்துகதைகள் கேட்ட போதும்உள்ளே இருக்கையிலேஎட்டி உதைத்த போதும்சற்றும் சலிக்காமல்-எனைவருடி வளரவைத்தாள்...... அவள்...!காய்ச்சல் வந்து படுக்கும் போதும்கற்கள் முட்கள்தைக்கும் போதும்எனது நோயால்தானே நோவுறுவாள்.....அவள்...!முற்றத்து மண்ணில்சுண்டுவிரல்- தான் - பிடித்து''அ'' எழுதச் சொல்லித்தந்தமுதல் ஆசிரியை....அவள்...!ஆம்.....கண்கண்ட தெய்வம் அவள் !கற்பிக்கும் ஆசான் அவள் !பத்துமாதம் மடியிலும்மிச்சக்காலம்மனதிலும் சுமக்கின்றதாய் அவள்..!

சகானா

சகானா
சகானாநீ மென்மையான ராகம் மட்டுமல்லஇனிமையான சுகமும் கூடநீ அழுதிடும் குழந்தைக்கு - தாய்பாடும் தாலாட்டுஅலைமோதும் உள்ளங்களுக்கு - சுகமான்இளந்தென்றல்ஒரு சோலைக்குயிலின்சோக கீதம் போல் - சுகமானதுஉன் பாடல்கள்.தெவிட்டாத திராட்சை ரசம் தரும்போதைக்கிணையாகும் - உன்ஆரோகண அவரோகண நிரவைகள்அதியமானுக்கு ஓளவை கொடுத்தநெல்லிக்ககனிபோல்எனக்கு நீஉன் ராக ஆலாபனையால் - என்உள்ளம் உவக்கிறதுஉள்ளம் உயிர்க்கிறதுசகானாநீ மென்மையான ராகம் மட்டுமல்லஇனிமையான சுகமும் கூட

சின்னச் சின்ன ஆசைகள்

சின்னச் சின்ன ஆசைகள்
சிட்டான அவளின் நடை காண ஆசைசிறகெனப் பறக்கும் சின்னக் கூந்தல் ஆசைமாம்பழ உதட்டில் மலரும் நகை காண ஆசைஅதில் மடக்கிச் சுழிக்கும் சின்னக் குமிழ் காண ஆசை செல்லமாக அவளை கிள்ளிப்பார்க்க ஆசைகிள்ளும் போது துள்ளும் அவளின் துள்ளல் காண ஆசைவட்டமான கறு விழிகளின் செல்லக்கோபம் ஆசைஅதில் சுற்றி விழுந்தபின் கிடைக்கும் சின்ன முத்தம் ஆசை மடியில் போட்டு அவளை முத்தமிட ஆசை - அப்போதுமலரும் அவளின் முகம் காண ஆசைசின்னச் சின்ன சினுங்கல்கள் ஆசைசில நேரச் சிலுமிசங்கள் ஆசை வட்டமிடும் ஆசைகள் என்மனதில்வாடிப்போக காரணம் அவன் தானே (கடவுள் ஃ கணவன்)பெண் சிசு ஒன்றைத் தந்திருந்தால் -என்மனச்சுமை என்றோ மறைந்திருக்குமே

முதல் நட்பு

முதல் நட்பு
என்னையே நான் அறியா வயதில் உன் நட்பு கிடைத்தது எனக்கு....! உன் நட்பின் மூலம் தான் என்னையே நான் கண்டேன்..!தனிமை என்னை வாட்டிய போது உன் நட்பில் அதை மறந்தேன்..!!இப்போதும் யோசிக்கிறேன் எப்போது உன்னை நான் கண்டேன்..!எப்படி உன்னிடம் பேசினேன்..!!!பசுமையான நினைவுகளை என்நெஞ்சு ஆழமாக மறந்துவிட்டது...!!!!! முதல் சந்திப்பை மறப்பது தான் புனிதமான நட்பா....?

நட்பு

நட்பு
இதயமெனும் பூந்தோட்டத்தில்-அழகிய
மலராக மலர்ந்துள்ள நம் நட்பு
நாம் கொண்ட பாசம்- நெடுங்காலசொந்தம்
நட்புகள் தடம் மாறதவை

செல்ல செல்ல கோபம் வரும்- நட்புக்குள்ளே
அள்ள அள்ள குறைவதில்லை
நட்பு மட்டுமே.-நட்பு எனும்
தீவினில் வாழ்கிறோம் நாம் வாழ்கிறோம்

இறைவனும் நமக்குள்ளே வழங்கிய
பரிசு இது.பூமி சுற்றும் வரை நாமும்
சேர்ந்து வாழத்தான் வேண்டும்.
அதை நீக்கு,இன்னொரு ஜென்மமும்
நட்புடன் வாழ்வோம்.

பூக்குமா வசந்தம்…

பூக்குமா வசந்தம்…
கண்கள் உனைக்கண்ட நாள் முதலாய்காத்திருந்தேன் உன் நட்புக்காகஎத்தனை இரவுகள் ஏக்கமாய் கழிந்தனதெரியுமா உனக்கு உன்னோடு ஒருவனைப் பார்த்தால்உள்ளம் ஊமையாய் அழுததுநட்பினாலா காதலினாலாவிடை தெரியா வினாக்கள் என்னுள் விளையாடி ஒய்ந்தன என்னுள்ளத்தை எனக்கு வெளிச்சமிட்டதுஉந்தன் வெட்கம் தானடி நான் தீர்மானித்து விட்டேன்என்னுள் இருப்பது நட்பல்லவடி அது நிச்சயமாய் காதல் தான் உன்னிடம் என் காதலைச் சொல்லஓராயிரம் தடவை முயன்று விட்டேன்விளைவு விபரீதம் ஆகிஉன் நட்பும் என்னை பகைத்து விட்டால்முயற்சி எனக்குள்ளேயே முடங்கிக் கொண்டது யாரும் அறியாமல்ஒப்புக்கொள்கின்றேன் நான் கோழைதான்ஏங்கித் தவிக்கின்றேன் என்றாவது ஒருநாள்என் எண்ணம் உன்னை எட்டும்அன்றுதானடி நான் பிறந்த பயனை அடைந்த நாள்காத்திருக்கின்றேன் அந்த நாளுக்காகபூக்குமா என் வாழ்விலும் வசந்தம்

மழை

மழை
மேகம் எல்லாம் ஒன்றாய் சேர்ந்ததுவானம் ஏனோ கவலையாய் கறுத்ததுகதிரவன் எங்கோ காணாமல் போனான்காலை மங்கி மாலையாய் தெரிந்தான் மெல்லிய காற்று மேனியை தொட்டதுதேகம் யாவும் சில்லிட வைத்ததுமரங்கள் எல்லாம் மலர்ச்சியாய் தோன்றினமனிதன் மட்டும் விரக்தியாய் தெரிந்தான் குடைகள் எல்லாம் விடுமுறை கேட்டனகுயில்கள் எங்கோ இனிமையாய் கூவினபறவைகள் விரைவாய் கூடு திரும்பினபசித்த குஞ்சுகளின் வயிறு நிரப்பின சின்னத் தூறல் மண்ணைத் தொட்டதுமண்ணின் மணம் மனதைத் தொட்டதுவண்ண மலர்கள் மகிழ்வாய் மலர்ந்தனசின்ன எறும்புகள் விரைவாய் திரிந்தன சோவென்ற மழை மண்ணில் விழபோவென்ற எண்ணம் என்னில் எழஓடி நனைந்தேன் ஒரு பொட்டல் வெளியில்பாடிக் குளித்தேன் பரந்த மழையில்தண்ணீரில் தோன்றும் குமிழிகள் ரசித்தேன்தானாய் மறையும் விந்தைகள் படித்தேன்பாய்ந்து ஓடும் வெள்ளம் பார்த்தேன்பள்ளம் நிரப்பும் தன்மை கண்டேன் எத்தனை அழகு கொட்டும் மழையில்எண்ணிப் பார்த்து இப்போதும் மகிழ்வேன்பார்த்து பார்த்து மகிழ்ந்ததுபசுமையாய் இன்னும் இருக்குதுமழையில் நனைந்த அனுபவம் - என்றும்மனம் மறக்காத அதிசயம்

Monday, December 15, 2008

Thursday, December 4, 2008

500 militants plan to enter India posing as fishermen

Mumbai:
Fresh reports indicate that fidayeens are likely to carry out terror attacks in Goa and Pune on the eve of Christmas and New Year
UNDER THREAT: Fidayeens plan to infiltrate Goa because its long coastline and security loopholes suit marine militantsMumbai police and the central intelligence agencies are questioning Azam Amir Kasab on the whereabouts of the 490-odd militants who were trained at the same camp in Pakistan as him. A copy of an intelligence report available with MiD DAY indicates that more than 500 terrorists plan to enter the country posing as fishermen. Kasab, the lone surviving terrorist in custody of the crime branch, has told the police that he is a Pakistani and had undergone training at a Lashkar camp in Pakistan.The questioning assumes significance in the wake of fresh reports that fidayeens plan to infiltrate Goa and Pune. A senior officer with the Anti-Terrorism Squad confirmed that Pune is on the hit list of the fidayeens because of the booming real estate in the city and its emergence as an IT hub. Goa was a terror target two years ago as well. The long coastline in Goa and the security loopholes there suit marine militants. Both Pune and Goa also have a large inflow of foreigners potential targets of the fidayeens. It is reported that the terrorists are likely to strike on the eve of Christmas and New Year. ISI training Interrogation of a few militants by the central intelligence agencies has revealed that the ISI along with the Navy is imparting training to LeT terrorists and other groups like the Hizbul Mujahideen and Jamait-e-Musalman. The fidayeens are taught to swim, handle large boats, lay mines in coastal zones and plant bombs under dams, bridges and ships. The final phase relates to training in navigational techniques, rescue operations, surveillance methods, concealment of explosives and underwater attacks on enemy targets and coastal vessels.Al-Qaeda threat in December '07In December 2007, the al-Qaeda threatened to carry out terror attacks in Goa. Indian authorities decided to strengthen security in Goa after intelligence agencies warned of a 'Bali-like' attack, referring to the 2002 bombings that killed 202 people, many of them foreigners on vacation.Usually, tens of thousands of backpackers arrive in Goa in December to celebrate Christmas and New Year.