Thursday, December 18, 2008

மழை

மழை
மேகம் எல்லாம் ஒன்றாய் சேர்ந்ததுவானம் ஏனோ கவலையாய் கறுத்ததுகதிரவன் எங்கோ காணாமல் போனான்காலை மங்கி மாலையாய் தெரிந்தான் மெல்லிய காற்று மேனியை தொட்டதுதேகம் யாவும் சில்லிட வைத்ததுமரங்கள் எல்லாம் மலர்ச்சியாய் தோன்றினமனிதன் மட்டும் விரக்தியாய் தெரிந்தான் குடைகள் எல்லாம் விடுமுறை கேட்டனகுயில்கள் எங்கோ இனிமையாய் கூவினபறவைகள் விரைவாய் கூடு திரும்பினபசித்த குஞ்சுகளின் வயிறு நிரப்பின சின்னத் தூறல் மண்ணைத் தொட்டதுமண்ணின் மணம் மனதைத் தொட்டதுவண்ண மலர்கள் மகிழ்வாய் மலர்ந்தனசின்ன எறும்புகள் விரைவாய் திரிந்தன சோவென்ற மழை மண்ணில் விழபோவென்ற எண்ணம் என்னில் எழஓடி நனைந்தேன் ஒரு பொட்டல் வெளியில்பாடிக் குளித்தேன் பரந்த மழையில்தண்ணீரில் தோன்றும் குமிழிகள் ரசித்தேன்தானாய் மறையும் விந்தைகள் படித்தேன்பாய்ந்து ஓடும் வெள்ளம் பார்த்தேன்பள்ளம் நிரப்பும் தன்மை கண்டேன் எத்தனை அழகு கொட்டும் மழையில்எண்ணிப் பார்த்து இப்போதும் மகிழ்வேன்பார்த்து பார்த்து மகிழ்ந்ததுபசுமையாய் இன்னும் இருக்குதுமழையில் நனைந்த அனுபவம் - என்றும்மனம் மறக்காத அதிசயம்

No comments: